
admin
May 10, 2026
உள்ளூர்
நாளை முதல் தண்டவாளத்தில் சீறும் யாழ் தேவி!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரதம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான யாழ்தேவி புகையிரத சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாத்திரம் இடம்பெறும்.
இந்த புகையிரதமானது குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாகும்.
புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட புகையிரத நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
புகையிரத சேவையின் கால அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





