Search

janani

Apr 8, 2026

உள்ளூர்

கல்வி மையங்களில் இருண்ட உண்மை : பிரதமர் அதிர்ச்சித் தகவல் !

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,026 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

2015 இல் 69 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2024 இல் 155 ஆகவும், 2025 இல் 159 ஆகவும் இது உயர்வடைந்துள்ளது.

இந்த வன்முறைக் கலாசாரத்தின் விளைவாக, இதுவரை 425 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகியுள்ளதுடன், ஆறு மாணவர்கள் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All