
admin
May 18, 2026
உள்ளூர்
தூதரக சேவைகளில் தற்காலிக மாற்றம்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மின்னணு ஆவண அத்தாட்சிப்படுத்தல் அமைப்பில் (e-DAS) ஏற்பட்டுள்ள எதிர்பாராத தொழில்நுட்பக் பிரச்சினைக் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம், பத்தரமுல்லையில் உள்ள தூதரக விவகாரங்கள் பிரிவின் முதன்மை அலுவலகத்துக்கும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து பிராந்திய தூதரக அலுவலகங்களுக்கும் (Regional Consular Offices - RCOs) பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து, e-DAS கணினி முறைமையை மிக விரைவில் மீட்டெடுப்பதற்கும், தாமதமின்றி வழமையான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இணையவழியில் (Online Appointments) ஏற்கனவே நேரத்தை ஒதுக்கியுள்ள விண்ணப்பதாரர்கள், மேலதிக விபரங்கள் மற்றும் அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக 'e-Channeling' முன்பதிவு அமைப்பைக் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கணினி முறைமை வழமைக்குத் திரும்பியதும், அதனால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அது குறித்து முறையாக அறிவிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






