
janani
Apr 24, 2026
உள்ளூர்
இன்று சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!

நாட்டின் சில மாவட்டங்களில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில பகுதிகளில் உடலில் உணரப்படும் வெப்ப நிலை “எச்சரிக்கை நிலை” வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 21 மாவட்டங்களில் மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருப்பின் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ச்சியான வெளிப்புற செயற்பாடுக ளினால் தடைபிடிப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து, போதிய நீர் அருந்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





