Search

admin

May 10, 2026

உலகம்

புதிய சரித்திரம் படைத்தார் விஜய்!

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன்னர் பதவியேற்றார். 

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன், விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். 

இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார். 

அதேநேரம் எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்யை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

இந்நிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது. 

இதன்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சி.ஜோசப் விஜய் எனும் நான் .... எனத் தொடங்கி முதலமைச்சராக, தமிழக ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் பொறுப்பேற்றார். 

விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதேநேரம் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் துறைச்சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிகழ்வுக்கு 5000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. 

அதேநேரம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது பதவியேற்பு நிகழ்வு நேரலையாக ஔிபரப்பப்பட்டது. 

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிலவி வந்த திமுக, அதிமுக ஆட்சியினை முறியடித்து புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசாங்கம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All