Search

sasi

Dec 24, 2025

உள்ளூர்

போலாந்தில் இருந்து இலங்கை வந்த முதலாவது சுற்றுலா விமானம்

நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) வந்தடைந்தது.

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டே இவ் விமானம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

போலந்தின் வார்சோ (Warsaw) நகரிலிருந்து நேற்று இரவு 10.10 மணியளவில் புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த விமானம் ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முதற்கட்டப் பயணத்திற்காக போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 180 சுற்றுலாப் பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் வருகை தந்தனர்.

2026 மார்ச் 15 ஆம் திகதி வரை வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஒருமுறை இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.

இவ்விமானம் மூலம் வருகை தரும் போலந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் பல சுற்றுலா பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் சுற்றுலா நிறுவன அதிகாரிகள் போலந்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகமாக வரவேற்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All