
sasi
Jan 16, 2026
உள்ளூர்
சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் விபத்து

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த வேன் ஒன்று, வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவி அருகே நேற்று (15) பிற்பகல் சுமார் 3 மணியளவில் விபத்துக்குள்ளானது.
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் வந்த மற்றொரு வேனுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், விபத்தில் தொடர்புபட்ட இரு வேன்களும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






