Search

sasi

Jan 11, 2026

உள்ளூர்

நோர்வூட் - மஸ்கெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்து

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியில் ரொக்குட் பகுதியில் இன்று (11) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, மாலை 4.00 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All