Search

Dec 23, 2025

உள்ளூர்

வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இன்று 71 வயதுடைய வினோதா ஜெகநாதன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டிலிருந்த பணிப்பெண் வெளியே சென்று திரும்பியபோது அவர் காணாமல் போன நிலையில் கிணற்றில் சடலமாக இருப்பதை கண்டுபிடித்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினார். சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு மற்றும் தலைமையகப் பொலிஸார் வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All