Search

Dec 23, 2025

உள்ளூர்

ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை வசிப்பிடமாக கொண்ட 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கடந்த ஞாயிறு தினத்தன்று குறித்த சிறுமி மாட்டிறைச்சி உணவு உட்கொண்ட பின்னர் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் அவரை உடனடியாக தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ,பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிறுமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், பேசிக்கொண்டிருந்த சிறுமி, அந்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சிறுமி உயிரிழந்ததாக வைத்திய வட்டாரங்கள் அறிவித்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்,சிறுமியின் இறப்புக்கு உண்மை காரணம் அறியாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

ஆகையால் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பெற்றோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All