SEGU
Nov 29, 2025
உள்ளூர்
திருகோணமலை மாவட்டத்தில் 10214 குடும்பங்கள் பாதிப்பு
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 10214 குடும்பங்களை சேர்ந்த 31634 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 182 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.11.29 இன்று (29) காலை 8.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 294 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9602 குடும்பங்களை சேர்ந்த 29809 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.14 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 612 குடும்பங்களை சேர்ந்த 1825 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 360 குடும்பங்களை சேர்ந்த 1056நபர்களும், தம்பலகாமம் 369 குடும்பங்களை சேர்ந்த 1149 நபர்களும்,மொறவெவ 105 குடும்பங்களை சேர்ந்த 321 நபர்களும்,சேருவில 173 குடும்பங்களை சேர்ந்த 582 நபர்களும், வெருகல் 398 குடும்பங்களை சேர்ந்த 1272 நபர்களும்,மூதூர் 4024 குடும்பங்களை சேர்ந்த 11754 நபர்களும்,கிண்ணியா 2375 குடும்பங்களை சேர்ந்த 7763 நபர்களும்,கோமரங்கடவல 41 குடும்பங்களை சேர்ந்த 120 நபர்களும் , பதவிஸ்ரீபுர 371 குடும்பங்களை சேர்ந்த 1187 நபர்களும், குச்சவெளி 1795 குடும்பங்களை சேர்ந்த 5720 நபர்களும், கந்தளாய் 203 குடும்பங்களை சேர்ந்த 710 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








