Search

Aug 31, 2025

உள்ளூர்

கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிற்கு சிஐடி அழைப்பு

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் மற்றும் வருகைக்காக அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்கவை நாளையதினம் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.



எனினும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All