
sasi
Dec 28, 2025
உள்ளூர்
லதா வல்பொல தனது 91-ஆவது வயதில் காலமானார்.

சிங்களத் திரையிசையின் ‘குயில்’ எனப் போற்றப்பட்ட பிரபல பாடகி லதா வல்பொல, நேற்று (27) தனது 91-ஆவது வயதில் காலமானார்.
1934ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 12 வயதிலேயே 1946ஆம் ஆண்டு அன்றைய ‘ரேடியோ சிலோன்’ வானொலி சேவையின் மூலம் தனது பாடல் பயணத்தைத் தொடங்கினார்.
தன் நீண்ட இசைப் பயணத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியுள்ளதுடன், அதில் வெளிநாட்டு மொழிப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1953ஆம் ஆண்டு வெளிவந்த ‘எதா ரே’ திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமான இவர், அதன் பின்னர் பல தசாப்தங்களாக 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தனது குரலால் உயிரூட்டியுள்ளார்.
இலங்கை இசை மற்றும் சினிமா உலகில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள அவரது மறைவு, ரசிகர்கள் மற்றும் கலை உலகினருக்கு பெரும் இழப்பாகும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






