Search

admin

May 18, 2026

உள்ளூர்

2026 ஏப்ரலில் இலங்கை சுற்றுலா வருமானம் 38.8% வீழ்ச்சி!


இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு 2026 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுலா வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
கடந்த 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

அதனுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் ஏப்ரல் மாத வருமானம் 38.8 வீதத்தினால் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 135,643 ஆகும்.

ஆனால், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த போதே 256.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான (ஜனவரி - ஏப்ரல்) ஒட்டுமொத்த சுற்றுலாத்துறை நிலவரத்தையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு (ஜனவரி - ஏப்ரல்) காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 876,277 ஆகும். இதன்மூலம் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த சுற்றுலா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 2025 ஆம் ஆண்டு (ஜனவரி - ஏப்ரல்) காலப்பகுதியில் வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 896,884 ஆகும். இதன்மூலம் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருமானம் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3 வீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், அதன் மூலமான ஒட்டுமொத்த வருமானம் 19.4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.












Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All