
admin
May 17, 2026
உள்ளூர்
எரிபொருள் இறக்குமதிக்கு கோடிகளில் செலவு செய்கிற இலங்கை

உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அண்மைய மாதங்களில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகப் பாரிய தொகையைச் செலவிட்டுள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு மே 6 மற்றும் மே 10 ஆகிய திகதிகளில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது அண்மைய இரண்டு டீசல் கப்பல்களையும் பொறுப்பேற்றுள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்கு புதிய கப்பல்கள் எதுவும் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனத் தெரியவருகிறது.
நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்பு தற்போதைக்கு போதுமானதாக உள்ள போதிலும், கொள்வனவுச் செலவுகள் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே காணப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






