
Rebecca
Feb 3, 2026
உள்ளூர்
49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாட்டின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34ஆவது உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) திரு. ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 49 கைதிகள் நாளை (2026.02.04) விடுதலையாக உள்ளனர்.
அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுள்ளது.
அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் இரத்து செய்யப்படவுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






