
admin
Feb 10, 2026
உள்ளூர்
நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் விசேட கண்காணிப்பு

உலகம் முழுவதும் சில நாடுகளில் பரவியுள்ள நிபா வைரஸ் தொடர்பில் இலங்கையின் சுகாதாரத் துறையினர் விசேட அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவில் பரவியுள்ளதாகக் கூறப்படும் நிபா வைரஸ் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர் தெரிவித்த முக்கிய கருத்துகள் :
இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் பதிவான உடனேயே சுகாதார அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
இது கடந்த கொவிட் (Covid-19) தொற்றைப் போன்றதல்ல, இது மிகவும் ஆபத்தானது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






