Search

janani

Mar 27, 2026

உலகம்

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ரஷ்யாவிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து அந்நாட்டு விநியோகஸ்தர்களுடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று பிற்பகல் இணையவழி (Online) ஊடாகக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, ரஷ்ய விநியோகஸ்தர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், கொள்வனவு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 35,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் அல்லது நாளை (28) நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த கப்பலில் 30,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோலும்,5,000 மெற்றிக் தொன் 95 ரக பெற்றோலும் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All