Search

admin

Jan 10, 2026

உள்ளூர்

30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் கடத்தல்

காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

யாழ். கைதடி A9 வீதிப் பகுதியில் நேற்று காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மரக்குற்றிகளை ஏற்றி வந்த 'ஹன்ரர்' (Hunter) ரக வாகனத்தை மறித்துச் சோதனை செய்தனர். 

இதன்போது, காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இவ்வாறு கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகளுள் தேக்கு மற்றும் வேம்பு போன்ற பெறுமதியான மரங்கள் காணப்பட்டன. 

இதனையடுத்து, வாகனத்தையும் மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All