Search

admin

Feb 20, 2026

உள்ளூர்

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 99,000-ஐத் தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், குறித்த நடவடிக்கையின் ஊடாக 137 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 289 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 55 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,997 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் இதன்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All