
janani
Apr 27, 2026
உள்ளூர்
அதிக விலையில் அரிசி, குடிநீர் விற்பனை : வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு!

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, கிராந்துருகோட்டை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இந்தத் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.
கீரி சம்பா மற்றும் ஏனைய அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை இதன்போது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அந்தந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





