Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

சம்மாந்துறையில் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கனரக வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று வீதி விதிமுறைகள் தொடர்பில் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரிவிற்குள் உள்ளடங்கும் வகையில் மண், செங்கல், கருங்கல், கொங்கிறீட் கற்கள் ஏற்றி இறக்கும் வாகனங்கள், வாடகை அடிப்படையில் பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களின் தரங்கள் அதன் குறைபாடுகள் என்பன இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக காலஅவகாசம் வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் நிலைய வளாகத்தில் பாடசாலை வேளையில் எவ்வாறு கனரக வாகன சாரதிகள் செயற்படுவது மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எவ்வாறு சாரதியம் செய்வது போன்ற விடயங்களை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தெளிவாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் வீதி ஒழுங்கு முறைகளை அறிந்து கொள்வதன் ஊடாக வீதி விபத்துகளை தடுக்க முடியும்.அத்துடன் கனரக வாகனத்தை பயன்படுத்தி அனுமதி பெற்ற இடத்தை விட்டு மற்றுமொரு அனுமதி பெறப்படாத இடத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது அவற்றை ஊக்குவித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களின் அனுமதி பத்திரம் உடனடியாக தடை செய்யப்படும் எனவும் வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp