
Rebecca
Jan 4, 2026
உள்ளூர்
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் இடமாற்றம் : நாளை புதிய நீதவான் நியமனம்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜன் நாளை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பதவியேற்கவுள்ளார்.
கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக செயற்பட்ட இவரது காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஏற்பட்டிருந்ததுடன் நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருள்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை 2026.1.2ஆம் திகதியன்று இடமாற்றம் செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த குறித்த நீதிவான் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் செய்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிவானாக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






