Search

janani

Apr 27, 2026

உள்ளூர்

வழமைக்கு திரும்பியது சாகரிக்கா ரயில் சேவை!

அண்மையில் தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த ரயில் இன்று முதல் வழமைப் போல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதன் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார். 

கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதுடன், அதில் ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன. 

மேலும், தடம் புரண்ட சாகரிக்கா ரயிலில் கடமையாற்றிய நான்கு ஊழியர்கள் ரயில் சேவைக் கடமைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All