Search

janani

Apr 2, 2026

உள்ளூர்

நீர் விநியோகம் தடைப்படும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


அதன்படி, நீர் விநியோகத்தை சில பகுதிகளில் மட்டுப்படுத்தவும், ஏனைய சில பகுதிகளில் ஒரு சில மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கும் வாகனங்களைக் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All