Search

Rebecca

Jan 12, 2026

உள்ளூர்

புத்தளம் - கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் - நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All