Search

Rebecca

Jan 12, 2026

உள்ளூர்

பிரதமருக்கு எதிரான மகஜரில் நாங்கள் கையொப்பமிடவில்லை! சிறீதரன் எம்.பி

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சேகரிக்கப்பட்ட, பிரதமர் மீதான அல்லது பிரதமருக்கு எதிரான அந்த மகஜரிலே இலங்கை தமிழரசு கட்சியினர் ஆகிய நாங்களும், இன்னும் சிலரும் அதில் நாங்கள் கையொப்பம் இடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையனுடைய புதிய, கல்வி செய்திகள் தொடர்பில், இலங்கையின் கல்வி அமைச்சரும், இந்த நாட்டினுடைய பிரதம அமைச்சருமான, ஹரிணி அமரசூரிய அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், அல்லது அவர் மீதான அவதூறுகள் பரப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன

குறிப்பாக, இலங்கையினுடைய பாராளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஒரு தொகுதியினரால், அவருக்கு எதிரான கையொப்பங்கள் பெறப்பட்டு, அவரை பிரதமர் பதவியில் இருந்தும்,கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என்ற அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான ஒரு மனுவையும் அவர்கள் சபாநாயகரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சேகரிக்கப்பட்ட, பிரதமர் மீதான அல்லது பிரதமருக்கு எதிரான அந்த மகஜரிலே இலங்கை தமிழரசு கட்சியினர் ஆகிய நாங்களும், இன்னும் சிலரும் அதில் நாங்கள் கையொப்பம் இடவில்லை.

காரணம் ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதம முதலமைச்சர், பிரதம அமைச்சராக இருக்கின்ற ஒரு காரணம்,அதனைவிட அவர் மீது சுமத்தப்படுகின்ற குற்றம் என்பதற்கான, சரியான ஆதாரங்களை இதுவரை யாரும் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All