Search

Rebecca

Feb 13, 2026

உள்ளூர்

வாகன இறக்கமதியாளர்கள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் வாகனங்களுக்கான புதிய வரி அறவிடப்படவுள்ளதால், வாகனங்களின் விலைகள் 2.5% இனால் அதிகரிக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக, 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு வாகனத்திற்கு, இந்த புதிய வரி மூலம் அதன் விலை சுமார் 2.30 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கும்.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது. ஏப்ரல் மாதம் முதல் சுங்கத் தீர்வை (Customs Clearance) செய்யப்படும் வாகனங்களுக்கே இது பொருந்தும். மேலும், 2023ஆம் ஆண்டு வாகனமாக இருந்தாலும், தற்போதைய சந்தை விலையின் ('Brand New' அடிப்படையில்) கீழேயே வரி கணக்கிடப்படும்.

தற்போது சுங்கத் தீர்வை நடவடிக்கைகள் மிகவும் வேகமாக நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. முன்னர் 2 முதல் 3 வாரங்கள் எடுத்த இந்த செயல்முறை, தற்போது 3 நாட்களில் நிறைவடைகிறது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் (RMV) வாகனங்களைப் பதிவு செய்வதில் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன. ஒரு வாகனத்தைப் பதிவு செய்ய 4 முதல் 5 நாட்கள் வரை எடுக்கிறது.

பதிவு செய்வதற்காக விசேட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அதற்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இது குறித்து உரிய அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All