Search

janani

Mar 29, 2026

உள்ளூர்

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய சேவைகளை 'அத்தியாவசிய சேவைகளாக' பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல சேவைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All