
admin
Apr 19, 2026
உள்ளூர்
ஜனாதிபதி – இந்தியத் துணைத் தலைவர் சந்திப்பு!

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் , இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இந்தியாவின் ‘அயலாரே முன்னுரிமை’ கொள்கைக்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்தார்.
இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






