
admin
Jun 5, 2026
உள்ளூர்
காணிகளை மீட்க மக்கள் அமைதிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலி வடக்கு, மயிலிட்டிந் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு மக்களால் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இத்தகையசூழலில் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதென காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
அதற்கமைய தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமையும் காணி உரிமையாளர்களால் அமைதிவழியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






