Search

Nivin

Aug 26, 2025

உள்ளூர்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட அறிவிப்பு.

அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, அத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க வேண்டாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

நீதித்துறையில் முழு நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்று கட்சியின் இணைத் தலைவர் ருவான் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஆறு முறை பிரதமராக இருந்தவர், மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர்,

ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் தனது சொந்த நலன்களுக்காகச் செயல்பட்டதில்லை என்றும், இந்த நாட்டை இப்போது இருப்பதை விட சிறந்த இடத்திற்கு உயர்த்த எப்போதும் உறுதிபூண்டுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய வளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கிய காரணமாவர் அன்று நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க போராடியவர் இன்று கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் இவர் அன்று நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள குரல்கொடுத்தவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp