Search

Rebecca

Mar 5, 2026

உள்ளூர்

மக்களை தற்கொலைக்கு தூண்டும் நுண்நிதி கடன் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில்..!

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போது, நாட்டில் அதிகரித்து வரும் நுண்நிதி கடன் சுமை மற்றும் அதனால் சமூகத்தில் உருவாகும் பாதிப்புகள் குறித்து எனது கோரிக்கையானது அமைந்திருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி “அழகான வாழ்க்கை – செல்வந்த நாடு” என்ற கொள்கையை முன்வைத்து ஆட்சிக்கு வந்தார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அந்த அரசியல் வாக்குறுதிகளின் நோக்கமாக இருந்தது. ஏழை மற்றும் சாதாரண மக்களின் பிரச்சினைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதே அரசினதும் பாராளுமன்றத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில், உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெறுவதற்காகவே அவசரமாக இந்த நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் கொண்டு வரப்படுஇன்றது. எந்த சட்டமூலமும் சரியான ஆய்வு மற்றும் சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்இ அதனை ஆளும் தரப்பு மேலும் ஆராய வேண்டும்.

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் அவர்கள் நுண் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைக்கு எதிராக சில பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவரின் செயல்பாடு இவ் அரசை விட வினைத்திறனாக உள்ளது.

சமூக மேம்பாட்டுக்காக அல்ல – கடனை செலுத்துவதற்காகவே மக்கள் கடன். மக்கள் பெரும்பாலும் நுண்நிதி கடன்களை வியாபாரம் அல்லது சமூக முன்னேற்றத்திற்காக பெறவில்லை என்றும்இ மாறாக ஏற்கனவே பெற்ற கடன்களை செலுத்துவதற்காகவே புதிய கடன்களை பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் .

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாண பகுதிகளில் நுண்நிதி கடன் சுமை மிகுந்ததாக பல செய்தி அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. பல கிராமங்களில் மக்கள் மீட்டர் வட்டி (உயர் வட்டி) முறையில் கடன் பெறும் நிலை உருவாகியுள்ளது. பொருளாதார சிக்கலால் குடும்பங்கள் நாளாந்த செலவுகளுக்கே கூட கடன் பெற வேண்டிய நிலை

ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் தற்போதைய பொருளாதார நிலையை எடுத்துக்காட்டும் வகையில், கடந்த காலங்களில் காதல் காரணமாக தற்கொலை சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இன்று காதலிக்கவே பணம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இளைஞர்களுக்கு காதலர் தினத்தில் ஒரு சாக்லேட் வாங்குவதற்கே கூட பணம் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

கடன் வலையில் சிக்கிய கிராம மக்கள் மட்டக்களப்பு உள்ளிட்ட கிராமப்புறங்களில் பல குடும்பங்கள் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை பெறும் தீவிர பிரச்சினையில் சிக்கியுள்ளன. சில சந்தர்ப்பங்களில் கடன் வழங்குபவர்கள் கடனை வசூலிக்க வீட்டிற்கு நேரடியாக வந்து குடும்பங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. சில

அறிக்கைகளின்படி, கடன் வசூலிப்பவர்கள் வீடுகளுக்குள் சென்று குடும்ப உறுப்பினர்களை அவமானப்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சமூகத்தில் மனஅழுத்தம்இ குடும்ப பிரச்சினைகள் மற்றும் சில சமயங்களில் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுண்நிதி கடன் திட்டங்களில் பெரும்பாலும் பெண்களே கடன் பெறுபவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சுய உதவி குழுக்கள், கிராமிய பெண்கள் குழுக்கள், கிரிப் போன்ற திட்டங்கள் வழியாக பெண்கள் கடன் பெறும் நிலை அதிகமாக உள்ளது. அதன் விளைவாக, கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலையில் பெண்கள் சமூக மற்றும் குடும்ப அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் இந்த சட்டமூலத்தில் பெண்களை பாதுகாக்கும் விதமான சட்ட ஏற்பாடுகள் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும்.

சில நிறுவனங்களுக்கு விலக்கு. இந்த சட்டமூலத்தில் முக்கிய நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் போன்ற சில தரப்பினருக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்இ ஆனால் சிறிய அளவில் செயல்படும் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

இவ்வாறு ஒரு பகுதியை மட்டும் கட்டுப்படுத்தி மற்றவர்களுக்கு விலக்கு வழங்குவது மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைக்கு எதிரானது. முழுமையான ஒழுங்குப்படுத்தல் தேவை

நுண்நிதி கடன் பிரச்சினை என்பது ஒரு பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல, சமூக பிரச்சினையாகவும் மாறிவிட்டதாக பல சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. எனவே, நுண்நிதி நிறுவனங்களின் வட்டி விகிதத்தை கட்டுப்படுத்துதல். கடன் வசூல் முறைகளை சட்டரீதியாக ஒழுங்குபடுத்துதல். கடன் சுமையில் சிக்கிய குடும்பங்களுக்கு மறுசீரமைப்பு திட்டங்கள் வழங்குதல். பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களை பாதுகாக்கும் விதமான சட்ட ஏற்பாடுகள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் அவசியமாக உள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மலையக பகுதிகளில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது இதனால் கூடுதலாக விவசாயிகள் அரச ஊழியர்கள் நெடும்தூரம் பிரயாணம் செய்து வேலை செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இதற்குரிய ஒழுங்கையும் மேற்கொள்ள வலியுறுத்தினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All