Search

janani

Mar 23, 2026

உள்ளூர்

வாகன தரிப்பிடக் கட்டணம் இன்று முதல்

கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீண்டும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, இன்று காலை 6 மணி முதல் வழமை போன்று வாகனத் தரிப்பிட முகாமைத்துவம் மற்றும் கட்டண அறவீட்டு நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு தீர்மானித்துள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய வாகன வரிசைகள் மற்றும் எரிபொருள் பெற வந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், கடந்த 18ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 இருப்பினும், எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR முறைமை மற்றும் ஒற்றை/இரட்டை இலக்க முறைமை ஊடாக எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, மீண்டும் கட்டணங்களை அறவிடுவது குறித்து கொழும்பு மாநகர சபை அவதானம் செலுத்தியிருந்தது.

 அதற்கமைய, இன்று முதல் வாகனத் தரிப்பிட முகாமைத்துவமும் கட்டண அறவீடும் வழமை போன்று இடம்பெறும் என கொழும்பு மாநகர ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All