Search

admin

Mar 11, 2026

உள்ளூர்

பாராளுமன்றத்தை மக்கள் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாற்றத் தொடரும் முயற்சிகள்

மார்ச் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் களுத்துறையில் பாராளுமன்றத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமானதும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகவும் மாற்றும் நோக்கில் செயல்படும் “Open Parliament Initiative” பாராளுமன்றக் குழுவின் உறுப்பினர்களுக்கான இரு நாள் குடியிருப்பு பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.

Westminster Foundation for Democracy (WFD) மற்றும் Coalition for Inclusive Impact (CII) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் குழுவின் இணைத் தலைவர்களான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும், பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்தின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமின் போது “Open Parliament Initiative” குழுவினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் மற்றும் துறை நிபுணர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த பயிற்சி முகாம் வளநிலை நிபுணர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே அறிவு மற்றும் அனுபவப் பகிர்வை ஏற்படுத்தியதுடன், எதிர்கால நடவடிக்கைகளுக்கான செயற்பாட்டு வழிகாட்டி செயல் திட்டம் உருவாக்குவதற்கும்வழிவகுத்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All