Search

MuSHArraf

Aug 24, 2025

உலகம்

இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் எல்லைகளைக் கடந்து தாக்குதல் நடத்தியிருந்த போதிலும், அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் மூலம் இந்தியாவைத் தொடர்ந்து சீண்டி வருகிறது அந்த நாடு.

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்க மண்ணில் வைத்து இந்தியாவை மிரட்டிய நிலையில், தற்போது அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் நஜாம் சேதி,இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தக்கூடிய மூன்று சூழ்நிலைகளைக் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்துள்ளார். மட்டுமின்றி தீபாவளி பண்டிக்கையைக் கொண்டாட பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை என்றும் அவர் கேலி செய்துள்ளார்.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) ரத்து செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், இந்திய கடற்படை கராச்சியை முற்றுகையிட்டால், அல்லது இந்தியா கராச்சி-லாகூர் வரை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதை உடைக்க முயற்சித்தால் பாகிஸ்தான் அணு ஆயுதங்களால் பழி தீர்க்கும் என்றார்.

மட்டுமின்றி, நீங்கள் அணை கட்டி தண்ணீரை தடுக்க முயற்சித்தால், நாங்கள் ஒன்றல்ல, 10 ஏவுகணைகளை ஏவி அதை வெடிக்கச் செய்வோம். எங்களிடம் நிறைய ஏவுகணைகள் உள்ளன என்றும் நஜாம் சேதி கொக்கரித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது, இதன் காரணமாக பாகிஸ்தான் தண்ணீருக்காக ஏங்கி வருகிறது. பாகிஸ்தானின் பெரும்பாலான மக்கள் இந்தியாவிலிருந்து பெறும் தண்ணீரைச் சார்ந்துள்ளனர், இதன் காரணமாக அந்த நாடு பலமுறை இந்தியாவிடம் முறையிட்டுள்ளது.

மே மாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் இந்தியா பாகிஸ்தான் மீது பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.





Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp