Search

Rebecca

Mar 5, 2026

உள்ளூர்

கச்சதீவு செல்ல வருகை தந்த எவரையும் திருப்பி அனுப்பவில்லை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குப் பின்னரான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே ஆகியோர் பங்குபற்றினார்கள்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கும் போது,

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

கச்சதீவு திருவிழாவிற்கு எதிர்பாராத விதமாக அதிகமாக பக்தர்கள் வருகை தந்தமையால், பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டோம் எனினும் திருவிழாவிற்கு செல்ல வருகை தந்த அனைத்து பக்தர்களையும் அங்கு சென்றடைய கூடிய சந்தர்ப்பம் அமைந்திருந்தது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற ஒரு பின்தங்கிய தீவில், ஒரு பக்த்தர் ஏனும் தவறாமல் கச்சதீவு அழைத்து வந்து திருவிழாவில் பங்குபெற சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட செயலர் மற்றும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ஆகியோரையும் அவர்களின் உத்தியோகத்தர்களையும் பாராட்டுவதாக அருட்தந்தை அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் தெரிவித்து, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் சார்பில் நினைவுச் சின்னத்தை மாவட்ட செயலருக்கும், வடமாகாண கடற்படைத் தளபதிக்கும் வழங்கி வைத்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All