
Rebecca
Feb 19, 2026
உள்ளூர்
"பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்" - யாழ்.பல்கலை முன்றலில் 4 நாள் தொடர் போராட்டம்

"பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை மீளப் பெற வேண்டும் என முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக பல்கலைக்கழக சமூகமும் போராட்டத்திற்கு பங்களித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான 4 நாள்கள் 12 அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அந்நிலையில் யாழ். பல்கலைக்கழகம் முன்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் குறித்த கையெழுத்து போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.





Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






