Search

janani

Apr 25, 2026

உள்ளூர்

வங்கி கணக்குகளை குறிவைக்கும் புதிய வகை டிஜிட்டல் மோசடி !

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். 

அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது உங்கள் நண்பரின் பெயரிலோ வரும் சந்தேகத்திற்குரிய ".apk" (dot apk) எனும் அபாயகரமான கோப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து திறந்தால், உங்கள் மொபைல் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் (Hackers) கைக்குச் சென்றுவிடும். 

இதன் மூலம் உங்கள் SMS செய்திகள் மற்றும் OTP குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் ஹேக்கர்களுக்குத் தெரிவதால், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைக் கூட அவர்கள் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக, உங்களுக்கு வரும் செய்திகளைத் திறக்கும்போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All