
Rebecca
Feb 17, 2026
உள்ளூர்
ஊடகவியலாளர்களின் நலன்களுக்கென புதிய திட்டங்கள்

ஊடகவியலாளர்களின் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபையில் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களின் தொழில் உரிமைகள், தொழிற்துறை கௌரவம் மற்றும் நிபுணத்துவத்தை பாதுகாத்தல் உட்பட உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கான முன்னிற்பதற்காக உரிய நிறுவனங்களை ஸ்தாபிப்பதன் தேவை குறித்து பிரதியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதற்கென ஊடகவியலாளர்களின் பட்டய ஊடக நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதற்கென சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






