Search

admin

Jun 27, 2026

உள்ளூர்

புதிய டெங்கு வைரஸ் பரவல்! பிரதமர் ஹரினி அமரசூரிய வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு புதிய டெங்கு வைரஸ் காரணமாகவே என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


"புதிய வைரஸ் தொற்றுடன் நோய் பரவல் அதிகரித்த போதிலும், நாங்கள் ஒரு விசேட செயல்பாட்டை மேற்கொண்டோம். தற்போது அதன் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படுகிறது. மஹரகம மற்றும் கொழும்பு நகரை ஒட்டிய பகுதிகளில் இதன் பரவல் அதிகமாக உள்ளது. வீடுகளை விடவும், பொது இடங்கள், குறிப்பாகப் பாடசாலைகள், அலுவலக வளாகங்கள் மற்றும் பாழடைந்த வெற்று நிலங்களில் இந்நிலைமை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அந்த வெற்று நிலங்களில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கச் செல்லும்போது அதன் உரிமையாளர்கள் வருகிறார்கள். கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலும் டெங்கு பரவக்கூடிய சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளது."


தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினமும் (27) நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சில அரச நிறுவன வளாகங்களிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All