Search

Rebecca

Feb 16, 2026

உள்ளூர்

நாமலின் கிரிஸ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அக்குரேகொடை துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் நீதிமன்ற கடமைகளில் இருந்து விலகுவதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

நாட்டில் ரக்பியை ஊக்குவிப்பதாக தெரிவித்து இந்திய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All