Search

Rebecca

Sep 4, 2025

உள்ளூர்

மன்னாரில் 33ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றையதினம் 33ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கினர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp