Search

admin

Jun 29, 2026

உள்ளூர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் சிகரெட் கடத்தல் முறியடிப்பு!

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட சந்தேக நபர் இன்று (29) அதிகாலை சீனாவின் குன்மிங் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கைதானதாக 'அத தெரண' விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

அவர் அந்த சிகரெட்டுக்களை பச்சை வழி ஊடாக வெளியே கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்தப் பெண் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய சீன நாட்டு பெண் தொழிலதிபர் எனத் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All