
admin
Feb 15, 2026
உள்ளூர்
மகா சிவராத்திரி விரதம் இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது.
ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. 2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன் அனுசரிக்கப்படுகிறது.
மகா சிவராத்திரி என்பது நம்முள்ளே இருக்கும் ஆன்மாவைத் தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு. சிவமே அன்பு, அன்பே சிவம் என்ற தத்துவத்தை உணர்ந்து, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து இறைவனிடம் சரணடைவதே இந்த நன்னாளின் உண்மையான நோக்கமாகும்.
இன்றைய தினம் இலங்கையில் உள்ள பல சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






