
janani
Apr 8, 2026
உள்ளூர்
இன்றும் நீண்ட நேர நீர்வெட்டு அறிவிப்பு !

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இரு கட்டங்களாக தலா 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைந்துள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சீரான நீர் விநியோகத்தைப் பேணும் நோக்கில், சுழற்சி முறையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, இன்று (08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கலகெதர, இரிதா பொல, பின்னவல, வேவல்பனாவ, பிடும்பே, மீப்பே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வேரகல, போப்பே, மலகல, கஹவல, மில்லவ, கொட்டியங்கொட, போரகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல மற்றும் யடவத்துர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






