Search

Oct 3, 2025

உள்ளூர்

தணமல்வில - வெல்லவாய வீதியில் விபத்து ; ஒருவர் பலி ; 6 பேர் காயம்!

தணமல்வில - வெல்லவாய வீதியில் 288ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், தணமல்வில பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


காயமடைந்தவர்கள் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதொடு விபத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுயைடவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்


வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All