
admin
Jan 30, 2026
உள்ளூர்
நாவலப்பிட்டியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் முற்றுகை

நாவலப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபானம் வடிக்கும் தொழிற்சாலையொன்றை நாவலப்பிட்டி ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்து, 47 வயதான பிரதான சந்தேக நபர் உட்பட உதவி புரிந்த மூன்று நபர்களை கைது செய்ததோடு, சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பவையும் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கும் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரதீப் சதுரங்கவின் மேற்பார்வையின் கீழ், நாவலப்பிட்டி நாகஸ்தென்ன பகுதியில் (29) மேற்கொண்ட சோதனையில் சந்தேக நபர்களையும், மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சோதனையின்போது, மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்த பின்னர் 112 லீட்டர் கள்ளச்சாராயம், 66 லீட்டர் கோடா எரிவாயு அடுப்பு,செப்பு சுருள், பீப்பாய்கள் என கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கடத்தல்காரர் நாவலப்பிட்டி மற்றும் யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுகளுக்குள் அமைந்துள்ள ஒரு காப்பகத்தில் நீண்ட காலமாக இரகசியமாகவும், நுணுக்கமாகவும் இந்த மோசடியை நடத்தி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரதீப் சதுரங்க தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






