
Rebecca
Jan 6, 2026
உள்ளூர்
கட்டுநாயக்கவில் 50 கோடி பெறுமதியான குஷ் மீட்பு

50 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைப்பற்றப்பட்டது.
விமான நிலைய வரலாற்றில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் அதிக பெறுமதியைக் கொண்ட போதைப்பொருள் தொகையாக இது அமைந்துள்ளது.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பயணிகள் மூவர் சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சோதனையிடப்பட்டனர். இந்தியாவின் மும்பை பகுதியைச் சேர்ந்த அவர்களில் இருவர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்கார்களினால் அவர்களிடம் இந்த குஷ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் போதைப்பொருளை கடத்துமாறும் அதற்காக பெங்கொக் சுற்றுலாப் பயணமொன்றை பெற்றுத் தருவதாகவும் கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மூவரும் இன்று காலை 11.07க்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த யு.எல்.403 விமானத்தில் வருகை தந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






