Search

admin

May 28, 2026

உள்ளூர்

களுத்துறை துப்பாக்கிச்சூடு: சந்தேக சிற்றூந்து மீட்பு

களுத்துறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையது என சந்தேகிக்கப்படும் சிற்றூந்து ஒன்று, களுத்துறை - நேபொடபகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.


துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கான பயன்படுத்தப்பட்டது என சந்தேகிக்கப்படும் குறித்த சிற்றூந்து, களுத்துறை - மத்துகம வீதியூடாகச் சென்று, துடுகல சந்தியிலிருந்து கெந்தகடுவ வீதியை அடைந்துள்ளது.

பின்னர், அங்கிருந்து மீண்டும் மத்துகம - ஹொரண வீதிக்குள் நுழைந்து, நேபொட நோக்கிச் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, நேபொட அஞ்சல் நிலையத்துக்கு முன்னால் சிற்றூந்தை கைவிட்டுச் சென்றுள்ள நிலையிலேயே காவல்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தற்போது வலான ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்துகம காவல்துறைப் பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All